MALAR 7
நோய்கள்பற்றி,பஞ்சபுத காந்த சக்தி பற்றி,
சக்தி ஓட்டப்பாதை பற்றி, சக்தி புள்ளி பற்றி
கவலைகள் இல்லாதவர்கள் இருக்கிறார்களா? குறைகள், தட்டுப்பாடுகள் இல்லாதவர்கள் இருக்கிறார்களா? வலி, நோய் இல்லாதவர்கள் இருக்கிறார்களா?பூரணஆரோக்யத்துடன் வாழ்கிறோமா? இல்லை
என்பது தெரிகிறது. இதனால் எற்படும் கஷ்ட நஷ்டங்களை நிறைய முன் கட்டுரைகளில் பார்த்தோம். இதனால் தான்
மனிதனுக்கு வரும் நோய்களை ஆராய்ந்து உலகில் நோய்களை போக்கி, நிவாரணம்
பெற எல்லா மருத்துவ துறைகளும் முயன்று, கண்டு
பயிற்சி அளிக்கிறார்கள். இதற்கென
உலகெங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவன்ங்கள் பெருகி வணிகத்தில் முதலிடம் பிடிப்பது மருந்து விற்பனை தான்.
இக் கட்டுரையிலும் வரப்போகும் சில கட்டுரைகளில்லும் ஓர் அளவு புரிந்து சுலபமாக, எளிதாக
நாமே நமக்கு சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் பலரின் அனுபவங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்களைச் செயல்முறை படுத்தி நோய்களுக்கு நிவாரணம் காண முயற்சி செய்வோம். நம் தமிழ் நாட்டில் இப்போது பரவலாக பக்க விளைவுகளைத் தடுத்துக் கொள்ளும் வகையிலும், இருக்கும்
நோய்களை எந்த விதத்திலாவது ரசாயண மருந்துகள் இல்லாமல் இயற்கை வாழ்வு முறைகளில் சிகிச்சை செய்து கொள்ளும் பயிற்சிகளைப் பார்க்கலாம்.
மனித உடம்பு மிகவும் உன்னதமானது. தன்
அன்றாட இயக்கத்துக்கு வேண்டிய தேவைகளை எல்லாம் பஞ்சபுத காந்த சக்தியில் இருந்து தானே கிரகித்து வேண்டிய வகைகளில் தானே உண்டாக்கும். ரசாயனங்களைக்
கொண்டு உடல் நலத்தைப் பராமரித்துக் கொள்ளும் உயரிய தன்மை கொண்டது. வேண்டியது எல்லாம் அதற்குத் தேவையான மூலப் பொருட்களை, பஞ்சபூத காந்த சக்தியை தட்டுப்பாடின்றி, சமச் சீராக அதற்குத் தர வேண்டும்.
இன்றைய எந்திரமயமான வாழ்க்கையில், மாசுபட்டச் சுற்றுபுற சூழலில் மனிதன் கருத்து விழிப்போடு வாழ முடியாமல் தவிர்க்க முடியாத நிலையில் உடம்புக்குத் தேவையான
இயற்கையோடு இசைந்து தரமான போஷாக்குகளை எடுத்துக் கொள்ள முடியாது தவிக்கிறான். இதனால்
உள்ளுறுப்புகளும் சரிவர இயங்க முடியாமல் ஆரோக்யத்தைத் தக்க வைக்க முடியாமல், பஞ்சபூத
சக்திகள் பற்றாக்குறையினால் நோய்களுக்கு ஆளாகி, நிம்மதியையும்
இழக்கிறான்.
இதற்கெல்லாம் நிவாரணம் வேண்டுமென்றால் எந்த வகையிலாவது பஞ்சபூத காந்த சக்தியை கருத்து விழிப்போடு ஒவ்வொரு நொடியும் கிரகித்து உறுப்புக்களை நல்ல முறையில் பூரண ஆரோக்யத்துடன் இயங்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும். எந்த
வகையிலும் உடம்புக்கு ஒவ்வாத தரத்தில் வெளியில் விஞ்ஞான முறைகளைக் கையாண்டு, அந்நிய
வேதிவியல் பொருட்களை சிகிச்சை என்ற பெயரில் உள்ளே அனுப்பினால், உடம்பு அவைகளை ஏற்றுக் கொள்ளாது. தவிர உள்ளே செல்லும் ரசாயனம் ஜீரணிக்கப் படாமல் நச்சாக மாறி கழிவுகளாக உள்ளே சேர்ந்து விடும். இது
உறுப்புகளை பாதித்து நோய்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். உடம்புக்குத் தேவைப்படும் காந்த சக்தி கிடைத்து விட்டால் தனக்கு வேண்டிய இரசாயனங்களை அதன் வேதியியல் நியதிப்படி தயாரித்து பராமரிப்பு வேலைகளைச் செய்து கொள்ளும். கழிவுகளையும் அவ்வப் பொழுது அகற்றி ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்.
வரும் கட்டுரைகளிலும், எடுத்துக் காட்டுகளிலும் உடம்புக்கு ஒவ்வாத பண்டங்களை நன்கு அறிந்து தெரிந்து அது பூரண ஜீரணம் செய்து கொள்ளக் கூடிய வகையில் விழிப்புணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தவிர இன்றைய வாழும் முறைகளையும் ஆய்ந்து, பழக்க
வழக்கங்களையும் மாற்றி உணர்வோடு பஞ்சபூத காந்த சக்தியை உள்ளே செலுத்திஉறுப்புக்களின் இயக்கத்தையும், பராமரிப்பு செயல்கள் அனைத்தும் தடையின்றி நடந்தேறவும் காந்த சக்தி பகிர்வை சீராக கவனித்து உடம்புக்கு உதவ வேண்டும்.
இதற்கு வேண்டியது எல்லாம் அனுபவ பாடம் தான். நவீன
மேல் படிப்புகள் எதுவும் தேவை இல்லை. அன்றாட வாழ்வில், நமது
பிறப்பின் குறிக்கோளை நினைவில் வைத்துக் கொண்டு நொடிக்கு நொடி உள் உணர்வைக் கவனித்துக் கொண்டே காரியங்களில் செயல்பட்டால் போதும். நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிக் காண்பித்துச் சென்றுள்ளனர். உதாரணத்துக்கு
ஆரோக்யம் உடல் நலம் இவற்றை அடிப்படையாக
வைத்து எழுதப்பட்ட திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு செய்யுளைப் பார்ப்போமே! செய்யுள்
அட்டாங்க யோகத்தில் என்ன சொல்கிறது?
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாறில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிந்தார்க்குக்
கூற்றை உதைக்கும் குறிக்கோள் …
என எளிமையாக சுலபமாக வாழ்வை அமைத்துக் கொள்ள 3000 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார். அப்போதே
இதைப் பற்றி அறிய மக்கள் ஆர்வம் காட்டவில்லை என வேதனைப்பட்டு கூறிச் சென்றுள்ளார்.
இதே போல் சீனாவிலும் ஆரோக்யத்திலும், நீண்ட
ஆயுளிலும் அக்கறை கொண்டு 5000 ஆண்டுகளுக்கு முன்பே பெரிய அளவில் ஆராய்ச்சிகள் செய்து பஞ்சபூத காந்த சக்தியை உடம்பில் செலுத்தும் வகைகளைக் கண்டு கையாண்டு இருக்கின்றனர்.
இந்த பஞ்சபூத காந்த சக்திகள் அண்ட வெளியில் – பிரபஞ்சத்தில்
பரவியுள்ள போது வான் காந்தம் ( UNIVERSAL MAGNETISM ) என்றும், அதுவே
பிண்டமாகிய நமது ஜீவனில் ஜீவகாந்த சக்தியாகவும் ( BIO
MAGNETISM )செயல்படுகின்றன்.
இதை சக்தி ஓட்டப் பாதை (
MERIDIANS )அல்லது
(CHANNELS
) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு பாதையிலும் நிறைய சக்தி புள்ளிகள் அமைந்துள்ளன. இவை
கண்ணுக்குப் புலனாவதில்லை. உடல்
முழுவதும் தோலின் மேற்புறமாக அமைந்து சக்தியை உள் வாங்கி உறுப்புகளுக்குப் பகிர்ந்து அளிக்கின்றன. மொத்தம் 14 சக்தி ஓட்டப் ளைபாதைகளும் 341 சக்தி புள்ளிகளும் உடலை பராமரிக்க அமைந்துள்ளன. எப்பொழுது
காந்த சக்திகள் குறைந்தாலும் இந்தப் புள்ளிகளைத் தூண்டுவது மூலமாக சக்தியை கிரகித்து பகிர்ந்து விட வேண்டும். இதற்கென ஒரு வீடியோ சக்தி ஓட்டப் பாதையைக் (
MERIDIANI ENERGETICI ) காட்டவும்
உதாரணத்துக்கு ஒரு உறுப்பின் (
KIDNEY PATHAND ENERGY POINTS)பகுதி
சக்தி ஓட்டப் பாதையை ஒரு வீடியோவின் மூலமும் பார்க்கலாம்.
எல்லா அம்சங்களைப் பற்றியும் அடுத்து அடுத்து விரிவாக விளக்கத்துடன் பார்க்கலாம். முடிந்த
வரை எளிதாகவும், மேலோட்டமாகவும் சிரமப்படாமல் முதலுதவி போலவும், பாட்டி
வைத்தியம் போலவும் நோய் அறிகுறிகள் தோன்றும் போது எல்லாம் நமக்கு நாமே சிகிச்சை அளித்து நிவாரணம் பெற மிகவும் உதவியாய் அமையும். இப்படி காந்த சக்தியைப் பெற்று நிவாரணம் பெற்று விட்டால் மட்டும்
போதாது. அடுத்து
விழிப்புணர்வோடு இதர வாழ்க்கை முறைகளையும் கவனித்து உணவுப் பண்டங்கள், உண்ணும் முறை, அளவு, தரம், மற்றும் காற்று, நீர், நெறுப்பு
போன்ற அத்தியாவசியமான காந்த மூலகங்களையும் அக்கறையுடன் தக்க வைக்க ஒத்து உதவ வேண்டும்.
Comments
Post a Comment