MALAR 15
நமக்கு நாமே மருத்துவர்
முன்
மலர்களில் ஆரோக்யம், நோய், கழிவு, பஞ்ச
பூதங்கள் இவை பற்றி அறிந்தோம். ஒரு சில வீடியோ படங்களில் பொதுவாக மக்கள் அவஸ்தைப் படும் சில நோய்களுக்கு அவரவர்களே தொடு சிகிச்சையாலும், அழுத்தச் சிகிச்சையாலும் எப்படி அழுத்தம் கொடுப்பது? நிவாரணம்
பெறுவது என்று கண்டோம்.
நாம்
அறிந்து, தெரிந்து
புரிந்து நினைவில் கொள்ள வேண்டியது :
கழிவுகள்
உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்வது மிகமிக அவசியம். கலப்படம் பெருகி வரும் இந் நாட்களில் மிக உன்னிப்பாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றையும் சோதித்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி எல்லாம் காற்று, நீர், சூரிய
வெப்பம், உறக்கம்
இவைகளை உதாசீனப் படுத்தாமல், சோம்பேறித்தனம் இல்லாமல் அக்கறையுடன் பயன்படுத்த முடியும், தொடர்ந்து
வழக்கமாக்கிக் கொள்வது? மற்றவர்களுக்கும் மனம் தளராமல் அவர்களுக்கு அலுத்துப் போகாமல் நினைவில் வைத்துக் கையாள நாம் முயற்சி எடுத்து உதவ வேண்டும். இதுவே புண்ணியம். இப் புண்ணியமே நம்மை சார்ந்தவர்களுக்கு வளம் பெருக்கும்.
வேண்டுமானால்
முன்பு கண்ட வீடியோக்களை மறுபடியும் போட்டு சந்தேகங்களில்லாமல் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் தெரிந்து புரிதல் அவசியம். கூடுமானவரை மருந்துகள் இல்லாமல் உணவு முறைகளிலேயும், நம் தொடு சிகிச்சை முறைகளாலும் நமக்கும், நம்மவர்க்கும் நாமே மருத்துவ உதவிகளைச் செய்து பழகி வருவது குடும்பத்துக்கு நீண்ட நாள் பலனாக அமையும்.
குறிக்கோள் :
நோயற்ற
சிகிச்சையின் வாழ்வு – மருந்தே உணவு –மருந்தில்லா மருத்துவம் – எல்லோரும் தொடு மேம்பாட்டை அறிந்து அவரவர் பழகவும், மற்றவர்களுக்குச்
சொல்லி கொடுக்கவும் ஆர்வம் வளர்த்துக் கொள்வது அவசியம்.
நமக்கு
நாமே சிகிச்சை அளித்துக் கொள்ள எளிமையான ஆரம்ப நிலை முறைகளை மலர் 15, 16, 17 ல் மூன்று வீடியோக்களாக வெளியிடுகிறோம். எப்பொழுது
வேண்டுமானாலும் இவைகளை எடுத்து திருப்பி திருப்பி போட்டு மனனம் செய்து கொள்வது நல்லது. இச்
சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த ஹீலர் போஸ் முகமது மீரா அவர்கல் மிகவும் அக்கறையுடன் பஞ்சபூத மேன்மை, அவைகளை
எப்படி உறுப்புக்களை மேம்படுத்தியும், நோய்களை நீக்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நேர்முகப் பயிற்சியுடன் விளக்குகிறார். இம்
மூன்று வீடியோக்களை மட்டுமே நன்கு பார்த்து புரிந்து கொண்டால் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் காணலாம் என்பது விளங்கும்.
மலர் 15,16,17
களில் காட்டும் வீடியோ என்ன நோய்களை குணமாக்கும் என்று விளக்குகிறார்கள். அவசியமாயின்
அந்த அட்டவணையை பிரதி எடுத்து மாட்டி வைத்துக் கொள்வது பலன் தரும்.
பஞ்ச
பூதங்களும் நம் உள் உறுப்புகள் ஐனந்தியும் தனிதனியாக பராமரிக்கின்றன.
எந்த பூதம் எந்த உறுப்பை பராமரிக்கின்றது எனப் பார்ப்போம்:
நெருப்பு – இதயம் மற்றும் அதன் துணைஉறுப்பு சிருகுடல்
நிலம் -- மண்ணீரல் மற்றும் அதன் துணைஉறுப்பு
வயறு
காற்று -- நுரையீரல் மற்றும் அதன் துணைஉறுப்பு
பெருங்குடல்
நீர்
-- சிறுநீரகம் மற்றும் அதன் துணைஉறுப்பு சிறுநீர்ப்பை
மரம் -- கல்லீரல் மற்றும் அதன்
துணைஉறுப்பு பித்தப்பை
இந்த 5 முதல் உறுப்புகளையும் ராஜ
உறுப்புகள் என்பார்கள். இவை 5ம் நன்கு பராமரிக்கப் பட வேண்டிய ஆற்றல், அடிப்படை
சக்தி.பிரபஞ்சத்தில்
உள்ள உயிர் சக்தியை தோல் வியர்வை துவாரங்கள் வழியாக கிடைக்கும். ஆனால்
சில பல காரணங்களால்
பிரபஞ்ச
உயிர் சக்தி குறைந்தது என கண்டு அந்த உறுப்பு சக்தி ஓட்டப் பாதையில் உள்ள அதற்கான சக்தி புள்ளியை தூண்ட வேண்டும். தொட்டு தூண்டினால் போதும். இதற்கான
காந்த சக்தி (உயிர்) உள்ளே வேண்டிய அளவு நிரம்பி உறுப்பு சீராக இயங்க ஆரம்பித்து விடும்.
நோயாளிக்கு
சிகிச்சை அளிப்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எந்த உயிர் சக்தி எந்த உறுப்பில் குறைந்து ஆரோக்கியம் கெட்டது என்பதை பயனாளி சொல்லும் நோய்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
எனவே
நமக்கு பஞ்சபூத சக்திகள் இல்லாத போது அல்லது குறைந்து போய் உள்ள போது என்ன என்ன நோய்கள் எந்த இடத்தில் ஏற்படும் என்று தெளிவாக தெரிந்து இருந்தால் நோயாளி சொல்வதைக் கேட்டு சக்தி ஓட்டப் பாதையையும் அதற்கான சக்தி புள்ளியையும் தெரிந்து கொள்ளலாம். இதைக்
கொண்டு 30 செகண்டுகள் ஆள்காட்டி விரலால் அந்தப் புள்ளியில் மட்டும் பட்டும் படாத அளவில் தூண்டி விட்டால் போதும். சிரமமும் குழப்பமும் இருக்காது. மிக எளிமையாக நோயை அகற்றி நிவாரணம் பெறலாம்.
நெருப்பு
மூலகம் (காந்த
சக்தி) ஓட்டப்
பாதையில் குறைவு இருந்தால் வரும் நோய்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சிகிச்சை
நிபுணரும் வீடியோவில் விளக்குவதைப் பார்க்கவும்.
நெருப்பு
மூலகம் (சக்தி) இதயம் சார்ந்தது. குறைப்பாடுகள்
நோய் என்று சொல்லக் கூடாது. மூலகத்துடன் தான்
இணைத்துப் பார்க்க வேண்டும்.
வரும்
நோயாளிகளுடன் பேச வேண்டும். அப்பொழுது அவர்கள் நோயினால் வேதனைப் படுகிறோம் என்று சொல்வார்கள். சிகிச்சை
அளிக்கும் நாம் மூலகத்தைக் கண்டறிய மேலும் விவரங்களை அவர்களிடம் கேள்வி கேட்டு தெளிவடைய வேண்டும். இது வரை நாம் தெரிந்து கொண்டது –தெரிந்து
கொள்ள வேண்டியது – அவர்கள்
கூறும் அறிகுறிகளை வைத்து
எந்த மூலகக் குறைப்பாட்டினால் உறுப்புகள் செயல் திறன் குறைந்து நோயாக வெளிப்படுகின்றது என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். தெளிந்து விட்டாள் நிவாரணம் ஒரு சில வினாடிகள் மட்டுமே. இப்படி விவரங்களை கேட்டு கேட்டு தெளிவது “கேட்டுப்
பார்த்து” சிகிச்சை
அளிக்கும் முறை. இதே முறையைப் பின்பற்றி எல்லா விவரங்களையும் சேர்த்துப் பார்த்தால் ஐந்து
பஞ்ச பூதங்களின் மூலகங்களில் ஒன்று அல்லது இரண்டு மூலகங்களில் தான் குறை என்று தெரிந்து விடும். பொறுமையாக நோயாளி அரண்டு போகாமல் பதில் சொல்ல ஒத்துழைக்கும் வகையில் கனிவாகப் பேச வேண்டும். உலகில்
உள்ள எல்லா வகை நோய்களும் இந்த ஐந்து உயிர் சக்தி மூலகங்களில் தான் உள் அடங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
**************
மூலகங்களுக்கு ( பஞ்ச பூதம் )சிகிச்சை
பொதுவாக எப்படி நோயாளிகளை அணுக வேண்டும் எனப்
பார்த்தோம். இனி வரும் மலர்களில் ஒவ்வொரு
மூலகத்தின் குறைப்பாடு அல்லது விகிதாச்சாரத்தில் ஏற்படும் மாறுதல்களினால் ஏற்படும்
நோய்கள் அல்லது அறிகுறிகள் என்ன என்ன என விரிவாகப் பார்க்கலாம்.
நெருப்பு மூலகம்
1.
இதயம்
மார்புக் கூட்டுக்குள் அமைந்துள்ளது.
இதைச் சுற்றி உள்ள இடத்தில் ஏதாவது
தொந்தரவுகள், வலிகள், அழுத்தம் இவை இருந்தால் நெருப்பு மூலகம் சரிவர அமையவில்லை
எனத் தெறிந்து கொள்ள வேண்டும்.
2.
சுவை :
ஒருவருக்கு கசப்பு – துவர்ப்பு சுவைகள் அறவே பிடிக்கவில்லை அல்லது இந்த இரு
சுவைகளும் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது என்றாலும், அவர் உடம்பில் நெருப்பு மூலகம்
பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்து மூலகத்தைச் சீர் செய்ய வேண்டும்.
3.
இதயத்தைக்
காட்டும் வெளியுறுப்பு நாக்கு. நாக்கில்
வலி, புண், அல்சர், எரிச்சல்,சுவையை உணர முடியவில்லை, போன்று எந்தவித அறிகுறி
ஏற்பட்டாலும் நெருப்பு மூலகம் சரியாக இல்லை .
4.
ஒருவருக்கு
தூக்கம் வருவதில்லை. மயக்கம் ஏற்படுகிறது.
அல்லது தூக்கம் கட்டுக்கு மீறி அதிக நேரம் துங்கும் நிலை உண்டாகிறது
என்றால் நெருப்பு மூலகம் சரியான விகிதத்தில் அமையவில்லை.
5.
மனநிலை
சரி இல்லை. சலனம், விரக்தி, சலிப்பு
போன்றவைகளினால் சொல்ல முடியாத நிலை ஏற்படும் போது நெருப்பு மூலகப் பகிர்வு
குறைப்பட்டுள்ளது.
6.
உடம்பில்
தோல் பகுதிகளில் திட்டுதிட்டாக சிகப்பு நிறத்தில் தேமல் போல் அறிகுறிகள் ஏற்பட்டாலும்
நெருப்பு மூலகம் சரியாக அமையவில்லை எனத் தெரிந்து கொள்க.
7.
சிலர்
எப்பொழுதும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசிக் கொள்வதும், செயல்படுவதுமாக
இருப்பார்கள். தனக்குத் தான் எல்லாம்
தெரியும். மற்றவர்கள் ஒன்றும்
தெரியாதவர்கள் என்றபடி நடப்பார்கள். ஆணவப்
போக்கு தெரியும். எதையும் மதிக்காத குணம்
அமைந்தவர்களாக இருப்பார்கள். நெருப்பு
மூலகம் சரி செய்யப்பட்டால் அன்பாக
நடக்கும் சாந்த மன நிலை ஏற்படும்.
8. இதயத்துடன்
இணைந்து செயல்படும் துணை உறுப்பு சிறுகுடல்.
இந்தப் பகுதியில் வலி, நமைச்சல், எரிச்சல், வாயுத் தொல்லை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் நெருப்பு மூலகம்
பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வகை அறிகுறிகளைக் கூறுபவர்களுக்கு, வீடியோ செயல்
விளக்கத்தில் விளக்கி உள்ளபடி உள்ளங்கையில்
எச் 8 என்ற புள்ளியில் வீடியோவில் காட்டியபடி ஆள்காட்டி விரலால்
20-30 செகண்டுகள் மட்டும் தொட்டு சிகிச்சை
அளிக்கவும்.
சிகிச்சைக் கொடுக்க சக்தி ஓட்டப் பாதை, சக்தி புள்ளி உடலின் இடது அல்லது வலது பகுதி ஏதாவது ஒன்றில் தேர்ந்து எடுத்து கொடுக்கலாம். இதை நினைவில் கொண்டு உடலின் எந்தப் பகுதியையாவது எடுத்துக் கொள்ளலாம்.
அறிகுறிகளில் ஏதாவது ஒன்றோ, அதற்கு மேலோ அல்லது எல்லா
அறிகுறிகளோ இருந்தாலும் நெருப்பு மூலகப் பாதையில் நெருப்பு சக்தி புள்ளியில்
சிகிச்சை செய்தால் முழு பலன் கிட்டும்
.
Comments
Post a Comment