MALAR 6
கழிவு தேக்கமே
நோய்
கழிவு நீக்கமே
நோய் நிவாரணம்
. உடலுக்குக் கிடைக்கின்ற
பிரபஞ்ச சக்தியின் ஓட்டம் சீராக இருந்தால் உடலுக்கு ஆரோக்யம். இந்த சக்தி ஓட்டம் சீர்கெடுவதே ஆரோக்ய
சீர்கேடு. சக்தி ஓட்டத்தை சீர் செய்வதே நிவாரணம்,
மருத்துவம்.
இயற்கை மருத்துவம் உடம்பில்
உள்ள பிராண சக்தியை மையமாகக் கொண்டது.
பிராண சக்தி என்கிற உயிர்ச் சக்தி உடலில் இரண்டு விதமான பணிகளைச்
செய்கிறது.
1.
உட்கிரகிக்கும் பணி ( assimilation )
2.
வெளியேற்றும் பணி ( elimination )
இந்த இரணடு பணிகளும்
சீராக இருந்தால் உடல் ஆரோக்யம். இந்தப் பணிகள்
சீர்கெட்டுப் போவது ஆரோக்ய சீர்கேடு.
இந்தப் பணிகளை முறைப்படுத்துவதே இயற்கை மருத்துவம்.
\பொதுவாக எல்லா மருத்துவமுமே
உடலில் உள்ள சக்தி நிலையைப் பற்றியதாக உள்ளது.
இரண்டு பணிகளைப் பற்றி பார்ப்போம்.
உடலில் உள்ள உயிர்த்
தன்மையானது உடலை இயக்கவும், உடலை பராமரிக்கவும் காற்று, நீர், உணவு இம் மூன்றையும் உணவாகப் பெற்று
ஜீரணித்து சக்தியைக் கிரகித்துக்
கொள்கிறது. இதுவே உயிர்ச் சக்தியின்
உட்கிர்கித்தல் (*****) இயக்கமாகும்.
ஜீரணத்தின் மூலம் சக்தியை
உட்கிரகிக்கும் பணியில் எஞ்சுகின்ற கழிவுகளை உயிர்ச் சக்தியானது சிறுநீராகவும்,
மலமாகவும், சளியாகவும், வியர்வையாகவும், காற்றாகவும் வெளியேற்றுகிறது. இதுவே உயிர்ச் சக்தியின் வெளியேற்றும் (*****)
இயக்கமாகும்.
இப்படி உயிர்ச்
சக்தியானது (பிராண சக்தி - ) உடலுக்கு
நன்மையானதை கிரகித்துக் கொள்வதும், நன்மையற்றதை, கழிவுகளை வெளியேற்றி விடுவதுமாக
செயல்படுகிறது. உடலின் (உயிரின்) இயற்கைத்
தன்மையை நன்மையை ஏற்றுக் கொள்வதும், தீமையை வெளியேற்றுதலும் உடலின் அன்றாட
நிகழ்வாகும். இந்த சீரான நிகழ்வே ஆரோக்ய
நிலையாம்.
உட்கிரகித்தல் நிகழ்வில்
உருவாகின்ற கழிவுகள், கழிவுகளின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட உறுப்புக்கள் மூலம்
வெளியேற்றப்படுகிறது. காற்று கழிவு மூக்கு
மூலமாகவும், நீர்க் கழிவு சிறுநீர்ப்பை புறவழி மூலமாகவும், மலக் கழிவு ஆசன வாய் மூலமாகவும், வியர்வைக் கழிவு தோல் மூலமாகவும், சளிக்
கழிவுகள் பிரதானமாக நுரையீரலிலிருந்து மூக்கு வழியாகவும் வெளியேற்றப்படுகின்றன. இந்த கழிவுகள் வெளியேற்றம் என்பது மனிதனின்
அறிவுக்கு, விருப்பத்திற்கு அப்பாற்பட்டு உடலில் உள்ள உயிர்த் தன்மையின்
இயக்கமாகும். கழிவுகளை வெளியேற்றும்
உடலின் இயற்கை தன்மையால் தான் ஆரோக்யமாக இருக்கிறோம்.
இந்த கழிவுகளை
வெளியேற்றும் பணியில் தடை ஏற்படும் போது தான் ஆரோக்யம் சீர்கெடுகிறது. இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்களினாலும்
முறையற்ற உணவுப் பழக்கத்தாலும் கழிவுகள் வெளியேறுவதில் தடை ஏற்படும் போது, உடல்
செல்களில் கழிவுகள் தேங்குகின்றன. கழிவுத்
தேக்கம் தொடரும் போது எந்த உறுப்பில் அதிகமான கழிவுகள் தேங்குகிறதோ அந்த உறுப்பு
பாதிக்கப்பட்டு பலவீனமாகி உறுப்பின் இயக்கமும் சீர்கெடுகிறது. இப்படி ஏற்படுகிற கழிவுத் தேக்கமே நோயாகிறது.
கழிவு தேக்கமே
நோய்
கழிவு நீக்கமே
நோய் நீக்கம்
உடல் வெளியேற்றுகின்ற
கழிவுகளை அடக்கக் கூடாது. அடக்குதல் தான்
நோயாகும் என்கிற புரிதல் வேண்டும். தேடல்
உள்ள சில ஆங்கில மருத்துவர்களால் இரசாயன மருந்துகளுக்கு எதிராக உருவான இயற்கை
மருத்துவத்தில் கழிவு நீக்கத் தத்துவம் உருவாகி அதை உயிர்சக்தியின் இயக்கத்தோடு
முழுமையாக பொருத்தி பார்க்கப்பட்டது. கிருமிகளுக்கு உணவு கழிவுகள் தான். கழிவுகளை நீக்கினால் கிருமிகள் நீங்கிவிடும் என்பதும் கழிவுகள் அற்ற உடம்பில்
கிருமிகள் புகுந்தால் ஆபத்தில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டது
இ.வ்விதம் உடலில் உள்ள
கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோகயப்படுத்துகின்ற மருத்துவராக உடல் தான் செயல்
படுகிறது. உடல் தான் முதன்மையான மிகச்
சிறந்த மருத்துவர். ‘உடலே மருத்துவர்’
என்கின்ற உண்மையை நாம் புரிந்து கொள்கிறோம்.
கழிவுகளின்
உருவாக்கம்
கழிவு தேக்கமே நோய்
என்பதையும்,கழிவு நீக்க்மே நோய் நீக்கம் என்பதையும் பார்த்தோம். கழிவுகள் உடலில் எப்படி உருவாகின்றன என்பதை
அறிந்து கொள்வோம். இரண்டு வகையில் உடலில் கழிவுகள் உருவாகின்றன.
1, இயற்கையாக உருவாகும் கழிவுகள்
உடலானது
உணவிலிருந்து சக்தியை பெறுகின்றது.
உணவானது முழுமையாக ஜீரணிக்கப்பட்டால் தான் அதிலிருந்து மேன்மையான, தரமான
சக்தியை உடல் பெற முடியும். முழுமையான
ஜீரணத்துக்கு உணவானது முதலில் வாயில்
ஜீரணிக்கப்படவேண்டும். உணவில் உள்ள
சுவைகள் முற்றிலுமாக வாயில் ருசிக்கப்படுவதையே வாயில் நடைபெறும் ஜீரணம் என்கிறோம்.
இதன் பிறகே அந்த உணவு இரைப்பையிலும், சிறுகுடலிலும் முறையாக முழுமையாக ஜீரணமாகும். ஆக உணவு என்பது வாய், வயிறு, சிறுகுடல் என்ற
மூன்று இடங்களிலும் முறையாக ஜீரணிக்கப்படுவதே முழுமையான ஜீரணமாகும்.
இவ்வித ஜீரணத்தின் இறுதியில் மேன்மையான, தரமான சத்துப்
பொருட்கள் சிறுகுடல் உறிஞ்சிகளாள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றன. இரத்த சுழற்சியின் வாயிலாக இந்த சத்துப் பொருட்கள்
செல்களுக்குள் செல்கின்றன. செல்கள் புதுப்பிக்கப்படவும், புதிய செல்கள்
உருவாகவும், செல்கள் ஆற்றலோடு இயங்கவும் இத்தகைய மேன்மையான சத்துப் பொருட்கள் தான்
பயன்படும்.
உணவு என்பது
வாய், வயிறு, சிறுகுடல் இம்மூன்று இடங்களிலும் முறையாக ஜீரணிக்கப்படும் போது
உருவாகின்ற கழிவுகளே இயல்பான கழிவுகள் ஆகும்.
இத்தகைய கழிவுகள் மலமாகவும், சிறுநீராகவும், காற்றாகவும், வியர்வையாகவும்
உட்லிலிருந்து அவ்வப்பொழுது வெளியேற்றப்படுகின்றன. இத்தகையான இயல்பான கழிவுகள் வெளியேறும் போது
உடலுக்கு எந்தவிதமான கஷ்டங்களும், தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை.
2.இயற்கை மீறலால்
உண்டாகும் கழிவுகள்.
பசிக்காமல் சாப்பிடும் போதும், உணவில் உள்ள சுவைகள் ருசிக்காமல் சாப்பிடும்
போதும், கவலையோடு சாப்பிடும் போதும் அந்த
உணவு வயிற்றிலும், சிறு குடலிலும் முறையாக
ஜீரணிக்கப் படுவதில்லை. ஜீரணம் முழுமையாக
இல்லாத காரணத்தால் ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கும் சத்துப் பொருட்களின் தரம்
குறைந்து விடுகிறது. அதுவே கழிவுகளாக
இருக்கிறது.
இந்த தரமற்ற சத்துப்
பொருட்கள், சிறுகுடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கும் போது
அவைகள் கெட்ட சக்தியாக செயல்படுகின்றன.
இந்த தரமற்ற சத்துப் பொருட்கள்
செல்களுக்குள் செல்லும் போது செல்கள் அவற்றை பயன் படுத்தாமல்
நிராகரிக்கின்றன. எனவே அவைகள் கழிவுகளாகவும்,
கெட்ட சக்தியாகவும் தற்காலிகமாக செல்களிலும்
இரத்தத்திலும் தேங்குகின்றன.
இத்தகைய கழிவுகளும், கெட்ட சக்திகளும் செல்களில் இருந்தும்
இரத்தத்தில் இருந்தும் வெளியேற்றப்படும் போது உடலுக்கு தலைவலி, உடல் சோர்வு,
பசியின்மை, தும்மல், மூக்கோட்டம், உட்காய்ச்சல், வயிற்றுப்போக்கு என சிறிய அளவில்
தொந்தரவுகள் ஏற்படும். இந்த தொந்தரவுகளுக்கு இரசாயன மருந்துகளை சாப்பிடும் போது
தான் கழிவுகள் வெளியேறாமல் அடக்கப்படுகின்றன்.
கழிவு நீக்கமே நோய் நீக்கமாகும்.
நோய் காரணிகள்
பஞ்சபூத சக்திகளின்
இயக்கமே உடலின் இயக்கமாகும். உடலின்
பஞ்சபூத சக்திகளின் இயக்கம் சீர்குலைவதே நோயாகும். உடலில் பஞ்சபூத சக்திகளின் சீர்குலைவிற்கு
காரணம் உறுப்புகளில் நிகழ்கின்ற கழிவு தேக்கமே ஆகும். உடலில் கழிவுத் தேக்கம் ஏற்படுவதற்கு என்ன
காரணம்?
இயற்கைக்கு மாறான நமது பழக்க
வழக்கங்களே கழிவுத் தேக்கம் ஏற்பட காரணமாகிறது. சுருக்கமாக இயற்கை விதி மீறலே
நோயாகும்.
இயற்கை விதி
மீறல்கள் என்றால் என்ன?
1.
பசிக்காமல் சாப்பிடுதல்.
2.
பசித்தும் சாப்பிடாமல் இருத்தல்
3.
சுவையை ருசித்து சாப்பிடாமல் வேகமாக
சாப்பிடுதல்
4.
தாகத்துக்கு தண்ணீர் அருந்தாமல் இருத்தல்
5.
தாகம் இல்லாமல் நீர் அருந்துதல்
6.
தூக்கம் வரும் போது தூங்காமல் இருத்தல்
7.
உடம்பு ஓய்வு கேட்கும் போது உழைத்தல்
8.
போதைப் பொருட்களை பயன்படுத்துதல்
9.
உடம்புக்கு அந்நிய பொருட்களான இரசாயன கலவைகளை
உட்கொள்ளுதல்
10. இரசாயனம் கலந்த
உணவுப் பொருட்களை சாப்பிடுதல்
11. இயற்கையான
உணர்வுகளுக்கு மாறாக செயல்படுதல்
இவற்றோடு இன்னும்
இயற்கையின் புரிதலுக்கு இசைவில்லாமல் எதுவெல்லாம் மாறுபட்டு இருக்கிறதோ
அவையெல்லாம் உடலில் கழிவு தேக்கத்தை ஏற்படுத்தும்.
இப்படி கழிவு தேக்கத்தால்
ஒரு உறுப்பு பாதிக்கப்படும் போது அந்த உறுப்பின் சக்தி நாளத்தில் அது
பிரதிபலிக்கும். இதனால் தோல் மூலமாக
பஞ்சபூத மூலக சக்தியை கிரகிக்கும். பணி பாதிக்கப்பட்டு உடலில் சக்தி நிலை மாறுபாடு
ஏற்படுகிறது. அதனால் உடலில் பஞ்சபூத
சக்தியின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
இந்த சக்தி பகிர்வில்
ஏற்படும் மாற்றத்தை சரி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பில் தேங்கிய கழிவுகள்
வெளியேற்றப்படாமல் மேலும் கழிவுகள் தேங்கும். நோய் நீங்காது. இந்த சக்தி பகிர்வின் சீரற்ற
நிலையே நோயாகும்.
இந்த சக்தி பகிர்வின்
சீர்கேட்டை சிகிச்சையில் சரிசெய்யும் போது சம்பந்தப்பட்ட உறுப்புக்கு போதுமான
சக்தி கிடைப்பதால் உறுப்பில் தேங்கிய கழிவுகள் வெளியேற்றப்பட்டு ஆரோக்யம் கிடைக்கிறது.
இயல்பான
கழிவுகள் வெளியேறும் போது உடலுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அடக்கி
வைக்கப்பட்ட, தேக்கி வைக்கப்பட்ட அதிகப்படியான கழிவுகள் வெளியேரும்
போது தான் தும்மல், சளி, இருமல்,
தலைவலி, உடல்வலி, காய்ச்சல்,
வாந்தி, பேதி, கட்டி,
கொப்பளம் போன்ற தொந்தரவுகள் தோன்றுகின்றன.
கழிவுகள் வெளியேற்றம் மூலமாக தோன்றக்கூடிய இத்தகைய அறிகுறிகளையே நோயாக நவீன மருத்துவம் பார்க்கிறது. நவீன மருத்துவத்தின் இரசாயன கலவைகளால்
கழிவுகள் வெளியேற்றம் தடைபட்டு உடலிலேயே தங்குகிறது. நோயும் போவதில்லை. அடுத்து அடுத்து
நோய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
Comments
Post a Comment