MALAR 17




காற்று மூலகம் சிகிச்சை
காற்று மூலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புகள் :   ராஜ உறுப்பு நுரையீரல்.  துணை உறுப்பு பெருங்குடல்.  இரண்டும் கழிவுகளை வெளியேற்றும் பணியில் பெரும் பங்கு வகிக்கின்றன.  உடம்பின் மொத்த வேலைகள் இரண்டு தான்.  ஒன்று உட்கிரகித்தல்.  இரண்டாவது கழிவுகளை வெளியேற்றுவது.  இரண்டும் சீராக நடைபெற அதனதன் மூலகச் சக்திகள் நன்கு அமைய வேண்டும்.  நுரையீரல் கரியமில வாயுவையும், சளி, இருமல் இவைகளில் உண்டாகும் கழிவுகளை  வெளியேற்றும்.  பெருங்குடல் ஜீரணத்துக்குப் பின் உள்ள சத்துக்களைப் பிரித்து இரத்ததிற்கு அனுப்பி, மீதமுள்ள திடமான சக்கை கழிவுகளை மலமாகவும் வெளியே தள்ளும்.  இதில் குறைபாடு ஏற்பட்டால் உடலில் கழிவுகள், நச்சுத் தன்மையுள்ள பொருட்கள், உள்ளே தங்கி பல இன்னல்களை விளைவிக்கும்.
1.       கழிவுகள் வெளியேற்றத்தில் தடை, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள்.
2.       நுரையீரல் பகுதியில் சுவாசம் சம்பந்தப்பட்ட எல்லா தொல்லைகள், மூக்கடைப்பு, மார்பு சளி, மூக்கொழுகுதல் போன்ற தொந்தரவுகள்.
3.       வீசிங் மூச்சு தொந்தரவு, மூக்கு சம்பந்தப்பட்ட புண், அடைப்பு, எரிச்சல், தண்ணீராக ஒழுகுதல், தொட்டாலே வலி போன்ற எல்லா தொந்தரவுகளும்.
4.       காற்று மூலகம் சரியாக அமையாவிட்டால் மனிதனின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும். மனக்கவலை அதிகமாகி அடுத்த கட்டமாகிய துக்கத்தில் அழுத்தி விடும்.  கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்குத் தள்ளப்படுவர். துக்கம் மேலோங்கி விடும், யாரையும் பார்க்கவோ அவர்களுடன் பேசவோ பிடிக்காது.  மிகவும் வேண்டியவர்களைப் பார்த்தாலே அழுகை பீறிட்டு வரும்.  தேம்பித் தேம்பி கூட அழுவார்கள்.
5.      சுவை :  இவர்கள் அதிகம் பேசுவார்கள்.  காரம் அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.  குரலும் சத்தமாகவும் அழுத்தமாகவும் அமைந்து உரக்க பேசுவார்கள்.
6.       நிறம்:  உடலின் தோல் பகுதியில் அங்கங்கே  வெள்ளை நிறத்தில் பட்டை பட்டையாகவும் திட்டுத் திட்டாகவும் நிறம் மாறி சொர சொரப்பாக இருக்கும்.
7.       தோல் உலர்ந்து காய்ந்து  சொரி மாதிரி எரிச்சலுடன் இருக்கும்.  சொரியாஸிஸ் போன்ற படை நோய்கள் வரும்.  நீர் வடியும்.
8.       தலை, கண் புருவம், மீசை, ஆண் பெண் உறுப்பு பகுதி தவிர மற்ற பாகங்களில் உள்ள இடங்களில் இருக்கும் மயிர்த்துவாரங்களில் வறட்சி, எரிச்சல் போன்ற அறிகுறிகள்.
இவைகளில் ஒன்று அல்லது எல்லா அறிகுறிகள் இருந்தாலும் காற்று மூலக சக்தி பாதையில் காற்று சக்தி புள்ளியில் ஆட்காட்டி விரலால் 30 செகண்டுகள் முன் சிகிச்சைகளில் கண்டபடி தூண்டி விட்டால் போதும்.  தொந்தரவுகள் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

ஆகாய (மரம்) மூலக சிகிச்சை
இது 5வது மூலகம்.  இதன் கட்டுப்பாட்டில் கல்லீரல் என்ற ராஜ உறுப்பும், பித்தப்பை என்ற துணை உறுப்பும் இயங்குகின்றன.  உயிர் சக்தியைக் கொடுத்து உடம்புக்கு போஷாக்கை தக்க வைப்பது.  மிக முக்கியமான செயல்பாட்டை பராமரிப்பது. எந்த விஷத் தன்மையுள்ள பொருள், கழிவு உள்ளே வந்தாலும் உடனுக்குடன் கண்டு இரத்தத்தில் இருந்து பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புகளை இயக்கி விஷத் தன்மையை, நச்சுத் தன்மையை அகற்றி நல்ல ஆரோக்ய  சூழ்நிலையை நிலை நாட்டும்.  ஜீரணம் நடந்து சத்துக்கள் க்ளூகோஸாக மாறி பயன் படுத்தப்பட்ட பின் உபரியாக உள்ள க்ளூகோஸை எடுத்து க்ளைகோஜனாக தரம் ஏற்றி மாற்றி இருப்பில் வைத்துக் கொள்ளும். உடல் உழைப்புக்கு வேண்டிய க்ளூகோஸ் பற்றாக்குறை ஏற்படும் போது  க்ளைகோஜனை க்ளூக்கோஸாக மாற்றி அனுப்பி உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்யும் முக்கிய வேலையை கல்லீரல் நடத்துகிறது.
1.      கல்லீரல் பித்தப்பை இவை இரண்டின் சம்பந்தப்பட்ட எல்லா தொந்தரவுகளும் ஆகாய மூலக குறைப்பாட்டினால் ஏற்படும்.
2.       தூக்கம் நிறைவாக இருந்தால் தான் ஆகாய (உயிர்) சக்தி பெற முடியும்.  இது தன்னை ஊக்கப் படுத்திக் கொள்ளவும் போஷாக்கை நிலைப்படுத்திக் கொள்ளவும் இரவு 11 மணி முதல் காலை 3 மணி வரை செயல்படுவதால் நிச்சயமாக இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் அமையுமாறு பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
3.      விஷத் தன்மை, நச்சு கலந்த உணவு வகைகளை உண்பதால் உண்டாகும் வேதனைகள், விஷ ஜந்துக்கள் கடிப்பதாலும் தீண்டுவதாலும் ஏற்படும் விஷத் தொந்தரவுகள் எல்லாவற்றுக்கும் ஆகாய மூலகத்தின் சக்தி புள்ளியை தூண்டினால் குணம் பெறலாம்.
4.       இம் மூலகம் பாதிக்கப்பட்டால் சிந்திக்கும் திறன் குறைந்து போகும்.  மறதி அதிகமாகும்.  நினைவாற்றல் திறன் பாதிக்கப்பட்டு தீர்வுகள், முடிவுகள் எடுக்க சிரமப்படுவார்கள்.  சீராக, நிலையாக யோசிக்க முடியாது.
5.       படபடப்பாக செயலில் ஈடுபடுவார்கள்.  நிதானமாக செயல்பட முடியாது.  அவசரமாக வேலை செய்வார்கள்.  பதர்ற காரியம் சிதறும் நிலை ஏற்படும்.
6.       எந்த சின்ன விஷயமாக இருந்தாலும் சட்டென எரிந்து விழுவார்கள்.  கோபம் வந்து சீறி விழுவார்கள்.  எதற்கெடுத்தாலும் சலித்துக் கொள்வார்கள்.  ஆகாய மூலகம் சீர்பட்டால் நிதானமாகவும், பொறுப்புடனும் செய்ய தன்னம்பிக்கை வந்து விடும்.
7.       சுவை – புளிப்பு சுவையை மிகக்  குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ விரும்பினாலும் ஆகாய மூலகம் சீராக இல்லை என்பது தெரிய வேண்டும்.
8.      உடம்பு இயக்கத்துக்கு உதவும் தசை,தசை  நார்கள் போன்ற இடங்களில் வலி ஏற்பட்டால் ஆகாய மூலகம் சரி இல்லை என தெரிந்து கொள்ள வேண்டும்.
9.       கண்கள் இம் மூலகத்தின் வெளி உறுப்பு.  கண்களில் தண்ணீர் வருவது, எரிச்சல், பார்வை குறைவது, திரை மாசு படுவது, கழிவுகள் வெளிப்படுவது போன்ற எந்த தொந்தரவுகளாக இருந்தாலும் மூலகத்தின் புள்ளியில் தூண்டினால் சரியாகி விடும்.
10.   நிறம் : மற்ற மூலகங்களில் பார்த்த மாதிரி இந்த மூலகத்தில் குறை ஏற்படும் போது உடம்பில் பச்சை நிறத் திட்டுக்கள், மலம் பச்சையாகப் போவது, சளி பச்சை நிறமாக வெளியேறுவது எல்லாம் ஏற்படும். மூலக சக்தி புள்ளியில்  ( லிவ் 1 ) தூண்டி சிகிச்சை அளித்தால் நிவாரணம் கிடைக்கும்.  இரண்டு கால்களில் எந்தக் காலில்  வேண்டுமானாலும் தொட்டு தூண்டிவிடலாம்.

இது வரை எல்லா மூலகங்களைப் பற்றியும் அவை சீராக அமையாத போது உண்டாகும் நோய்கள், அறிகுறிகள், தூண்டுவதற்கான சக்தி புள்ளிகள் எல்லாம் பார்த்தோம்.
முன்னதாக சிகிச்சை பெற்றவர்கள் மறுநாளே வந்தால் உடனுக்குடன் சிகிச்சைக் கொடுக்க வேண்டாம்.  ஒரு வாரம் நாம் சொன்னபடி வாழ்க்கை முறையில் பழக்க வழக்கங்களை மாற்றி இயற்கை விதிகளை மீறாமல் இருந்து கவனிக்கச் சொல்லவும்.  மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று பயந்தார்கள் என்றால் 4  நாட்களில் ஒரு முறை தூண்டி விடலாம்.
இரண்டாவது முறை வரும் போது முன்பு பார்த்து தூண்டியதை நினைவு கூற வேண்டாம்.  மறுபடியும் விவரம் கேட்டு அப்பொழுது என்ன என்ன உபாதைகள் எனக் கண்டு இதற்கான மூலகங்களில் சக்தி புள்ளிகள் தேர்ந்து தூண்ட வேண்டும். 

அவர்கள் கூறும் அறிகுறிகளில் இரண்டு அல்லது மூன்று மூலகங்கள் பாதிப்பு எனத் தெரிந்தால், இந்த மூன்றுக்கான அறிகுறிகளில் எந்த அறிகுறி அதிக தொல்லை, அதிக நாட்களாக உள்ளது போன்ற விவரம் கேட்டு அதற்கான மூலகத்துக்குச் சிகிச்சை கொடுத்தால் போதும்.  பஞ்சபூத தத்துவ அடிப்படையில் மற்ற இரண்டு மூலகங்கள் சரியாகி விடும்.  உடம்பே ஒழுங்கு படுத்திக் கொள்ளும்.  நம் கடமை தூண்டுவது மட்டுமே.  நிதானமாக தெளிவாகக் கேட்டு தெளிவாக அறிந்து தன்னம்பிக்கையுடன் தூண்டுவது மட்டுமே. 
வரும் பயன்பாட்டார்களுக்கு இயற்கை வாழ்க்கை முறைகளை நினைவு படுத்தி பசி, தாகம், உடலின் பாஷை மொழி, உறக்கம், அதிகாலை எழுவது, ஓய்வு இவைகளில் கவனம் செலுத்தி விழிப்புணர்வோடு வாழ வேண்டியதன் அவசியத்தை  விளக்க வேண்டும்.வாழும் முறையைக் கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு சிகிட்சை பலனளிக்காது என்பதனைப் புரிய வைக்க வேண்டுவது மிக மிக அவசியம்.
வாழ்வோம் வளமுடன்.

        




இயற்கை வாழ்க்கை முறை 



Comments

Popular Posts