MALAR 16






         இயற்கைச் சக்திக்கு உதவுவோம்

உடலை நலத்தோடு வைத்துக்கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும், உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறுநேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. இயற்கைச் சக்திகளின் விளைவாலோ அல்லது ஐம்புலன்களின் விளைவாலோ இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது. உணவு, உறக்கம், உழைப்பு, பால் உறவு இவற்றை மிகையாகப் பயன்படுத்துவதாலும், தவறாகப் பயன்படுத்துவதாலும், புறக்கணிப்பாலும், சிந்தனையோட்டத்தை அவ்வாறு பயன்படுத்துவதாலும், நமது செயல்களின் விளைவாகத் தொந்தரவுகள் நேரலாம்.

பருவ வேறுபாடு, பரம்பரை உணர்ச்சிப் பதிவு, வானில் கோள்களின் ஓட்டத்தில் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள், அவற்றிடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்தத் தடுப்பு வசதிகன் சேர்க்கையின் விளைவுகள் இவை இயற்கைச் சக்தியால் சேரும் பாதிப்புகள் ஆகும். இந்த விளைவுகளிலிருந்து காக்க இயற்கை சில தளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களால் நாம் தடுத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தால் நாம் செயல்படும் பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று. அதனால் தடுப்பு நிலையை உயர்த்திக் கொள்ள நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதனால் நாம் அறிய முடியாத நிலையில் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் நாம் செய்த தவறுகளால் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் தடுப்பு நிலையை உயர்த்தி, உடல் நலக்கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பல நூற்றாண்டுக்கு முன்பே மனிதன் தெரிந்து கொண்டிருக்கிறான். தவிர்க்க முடியாத காரணங்களால், தான் நோய்வாய்ப்பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம், நோயை விரைவிலும், உடல் நலத்தை விரைவில் பெற்றுவிடலாம்.

                                                                      *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

·          
·          
·          




      அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று சொல்லும் போது வேதாந்தம் அண்டத்திலும், பிண்டத்திலும் உள்ள அனைத்திற்கும் மூலப் பொருள் ஒன்றே, எனவே எல்லாம் ஒன்றே என்கிற கோட்பாடை முன் வைக்கிறது. 

சித்தர்கள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், தங்களின் அறிவின் திறத்தால் சிந்தனையை வேறுவிதமாகச் செலுத்தி ஒரு பேருண்மையைக் கண்டறிந்தார்கள். 

அதாவது அண்டத்தில் உள்ள எந்த சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் ஏதோ ஒரு நிலையில் மனித உடலில் செயல்படுகிறது என்ற உண்மையே அது.

சக்தியின் அளவும், செயல் திறனும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறதே அன்றி நம் உடலோடு தொடர்பில்லாத சக்திகள் என்பது இல்லவே இல்லை. 

எனவே நம் உடலையும் அதன் இயக்கங்களையும் ஆராய்ந்து பார்த்த சித்தர்கள் 96 தத்துவங்களாக அது இயங்குவதையும் கண்டறிந்தார்கள். 

எனவே அந்த 96 தத்துவங்களையும் சீராகச் செயல்பட வைப்பது எவ்வாறு என்பதைக் குறிந்து ஆராய்ந்து, இயற்கை சக்தியை கால நேர மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றி நம் உடலில் செயல்படச் செய்து 96 தத்துவங்களையும் சீராக இயங்க வைத்து தங்கள் தேகத்தை அழியா தேகமாக மாற்றி நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

இயற்கை சக்திகளின் இயக்கம் மாறிக் கொண்டே இருக்கிறது. நம்மையும் அதற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழும் போது உடலில் இயற்கையாக நடைபெற வேண்டிய செயல்கள் தங்குதடையின்றி நடைபெறுவதஉள்ள நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும். 

இயற்கையோடு நம் உடலின் உள்ளுறுப்புகள் இயைந்து இயங்கும் போது நம் எண்ணங்களும், மனோபாவங்களும் தூய்மையடைவதோடு, வலிமை பெறுகின்றன. 

இதனால் இயல்பாகவே மன அமைதியும், மனத்தெளிவும் ஏற்பட்டுவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் மனதில் தோன்றுவதில்லை. 

மாறாக ஏதாவது ஒரு இயற்கை சக்தியோ, கனிம சக்தியோ நம் உடலில் அதிக்கப்படும் போதோ அல்லது குறைவுபடும் போதோதான் நம் மனதில் தேவையற்ற எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி நம்மை தவறான செயல்களில் ஈடுபடுத்தி துன்பத்திற்கு ஆளாக்கி விடுகின்றன. 

அல்லது நமக்கு அமையும் நல்ல சூழ்நிலைகளை வலிமையிழந்த மனோபாவத்தால் நிராகரித்து துன்பத்திற்கு ஆளாகி விடுகிறோம்.

மன வலிமையே நமக்கு எழும் உணர்வுகளுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதைக் கண்டோம். 

அந்த மன வலிமைக்கு ஆதாரமாக விளங்கும் பிரபஞ்ச சக்திகளை நாம் பல வழிகளில் பெற்றுக் கொள்கிறோம்.

ஆதாரச் சக்கரங்கள் மூலமாக, சக்திமையங்கள் வாயிலாக, உணவின் மூலமாக, மூச்சின் மூலமாக, நீர் அருந்துவதின் மூலமாக போன்ற வழிகளில் பெற்றுக் கொள்கிறோம். 

இவற்றில் நீர் அருந்துவதின் மூலம் குறைவான சக்தியே கிடைக்கிறது. 

உணவு முறையில் சரியான பழக்க வழக்கம் இல்லாத காரணத்தால் உடலில் தேவையற்ற கழிவுப் பொருள்கள் தேங்கி நோய் நொடிகளை ஏற்படுத்தி உடலை பலவீனப்படுத்தி விடுகிறது. 

உடல் பலவீன மான நிலையில் இருப்பதாலும், நாடி, நரம்புகளில் தேவையற்ற கழிவுகளின் அடைப்புகள் ஏற்பட்டு விடுவதாலும் சக்கரங்களும், சக்தி மையங்களும் சரிவர இயங்கி தேவையான சக்திகளை பிரபஞ்சத்தில் இருந்து கிரகிக்க முடியாமல் போய்விடுகிறது. 

இப்படி எல்லா வகையிலும் சக்திகளின் பேரிழப்பு ஏற்பட்டு விடுவதால் மனிதனின் ஆயுள் குறைந்து போய் விடுகிறது.

எந்தவித ஆரோக்யக் குறைவும் இல்லாத ஒருவருக்கு பசி உணர்வு தோன்ற வில்லை என்றால் அந்த ஒரு வேளை உணவை அவர் தவிர்த்து விடுவதே நல்லது.

ஏனென்றால் அவர் உடலுக்குத் தேவையான சக்தி அவர் சக்தி நரம்புகளிலும், தசை நார்களிலும் இருப்பதே காரணமாகும். 

கடின உழைப்போ, வேலைப் பளுவோ இல்லாதவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து விடுதல் நல்லது.

இதனால் நம் சிந்தனை கட்டுக்குள் வரும். அவ்வாறில்லையெனில் ஒரு வேளை கால் வயிறும், அடுத்த வேளை திருப்திகரமான உணவும், மூன்றாவது வேளை அரைவயிறு உணவோ அல்லது திரவ உணவோ எடுத்துக் கொள்ளும் போது உடலின்கண் அதிக சக்திகள் சேராத வண்ணம் காக்கப்படும். 

இவ்வாறு தேவைக்கு அதிகமாக சக்திகள் உடலில் கூடும் போது பல விதமான உணர்வுகளைத் தூண்டி விடுவதால் உடலுக்குள் ஒரு உணர்வுப் போராட்டமே நடைபெற்று மன அமைதியைக் குலைத்து விடும்.

பசிக்காக உண்ணாமல் மூன்று வேளை உணவு அவசியம் என்று எண்ணி உண்ணும் போது உணவு அதிகப்படியாகி விடுகிறது. 

இதனால் உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கத் தொடங்கி மந்த நிலையை உருவாக்கி நோய்களுக்கு காரணமாகி விடுகின்றது. 

மனம் வலிமையிழந்து மன உளைச்சல் ஏற்படுகிறது.

உணவின் மூலம் அதிக சக்தியை உடலுக்குக் கொடுக்கும் போது நாடி நரம்புகள் முறுக்கேறி ஆணவம், அஹங்காரம், எல்லாவற்றையும் தன் வயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், செறுக்கு போன்ற முரண்பட்ட உணர்வுகளைத் தோற்றுவித்து நமக்கும் பிறர்க்கும் உள்ள இணக்கத்தை சீர்குலைத்து விடுகிறது. 

இதை இப்போதே நீங்கள் உங்கள் நிலையை ஆராய்ந்து உணரலாம். 

மேலும் அதிக போக உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது மிருக உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறது. 

எனவே இதையெல்லாம் உணர்ந்து சரியான விகித உணவு, அதன் மூலம் நோயற்ற வாழ்வு, அதன் மூலம் சீரான உடல் இயக்கம், அதன் மூலம் சக்கரங்கள் மற்றும் சக்தி மையங்கள் மூலமாக தேவையான பிரபஞ்ச சக்திகளைக் குறைவில்லாமல் பெற்றுக் கொள்ளுதல் அதன் மூலம் மன அமைதி மற்றும் மன வலிமையை அடைந்து தவ வாழ்வை மேற்கொள்ளும் போது எளிதில் மன ஒருமைப்பாடு அமைந்து தியானத்தில் வெற்றி சித்திக்கிறது. 

இவ்வாறு அதிகப்படியாக உள்ள சக்திகளை சமன்படுத்தவே நம் முன்னோர்கள் விரத தினங்களை நடை முறைப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*









            நில மூலகத்துக்கான சிகிட்சை
மலர் 15ல் போஸ் முகமது மீரா ஐயா பஞ்ச பூதங்கள், அவைகளைச் சார்ந்த உறுப்புகளைப் பற்றியும், இந்த மூலகங்கள் (பூதங்கள்) ஒவ்வொன்றும் சீராக இல்லாமல் இருந்தால் ஏற்படும் நோய்கள், அவைகளின் அறிகுறிகள், அந்நோய்களைப் போக்க  அதற்கான சக்தி புள்ளியில் எப்படி தொடு சிகிச்சை கொடுப்பது என்பதையும் விளக்கினார்கள்.

முதல் விளக்கத்தில் நெருப்பு மூலகம் பற்றி விரிவாக விளக்கி செயல்முறை விளக்கம் அளித்தார்கள்.

அடுத்ததாக காட்டி விளக்குவது :-       நிலம் மூலகம்
நிலம் மூலகத்துடன் இணைந்த உறுப்பு மண்ணீரல்.  மண்ணீரல் ராஜ உறுப்பு.  அதன் துணை உறுப்பு வயிறு.இதன் சக்தி பகிர்வு சீராக இல்லை என்றால் என்ன நோய்கள், அறிகுறிகள் தெரியும், அதற்கு எப்படி சிகிச்சை என்பதை இப்பொழுது பார்ப்போம். கவனிக்க வேண்டிய அம்சம். சக்தி ஓட்டப்பாதைப் பற்றி பார்த்தோம். 12 உறுப்புகளுக்கும் ஒவ்வொரு பாதை.  உடலின் இடது பகுதியில் 12ம் வலது பகுதியில் 12ம் ஓடுகின்றன. சிகிச்சையை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

என்ன என்ன தொந்தரவுகள் எனப் பார்ப்போம்.
1.     ஜீரணக் கோளாறுகள் எதுவாக இருந்தாலும் அவை நில மூலக குறைப்பாடு தான்
2.     சுவை : யாருக்காவது இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் பிடிக்கவே பிடிக்காது போகிறதோ அல்லது அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்களோ அவர்களின் நில மூலகத்தில் குறைப்பாடு எனப் புரிந்து கொள்ள வேண்டும்.  இனிப்பு சுவையை உணவுக்கு சற்று முன் சாப்பிடுவது இரைப்பைக்கு நல்லதாக அமையும்.  பலப்படுத்தும்.  பின்பு வரப்போகும் உணவை ஜீரணிக்கத் தேவையான ரசாயன கலவைகளையும், அமிலங்களையும் தயார் செய்ய இனிப்பு சுவை பேருதவியாக இருக்கும்.
3.     உதடுகளில் மற்றும் ஈறுகளில் எந்தவித தொந்தரவுகள் ஏற்பட்டாலும் அது நில மூலகத்தின் சீர்கெட்ட நிலையினால் தான் இருக்கும்.  புண், காயங்கள், வெடிப்புகள், எரிச்சல், விண் விண் என்று வலி, இரத்தக் கசிவுகள்  போன்ற எந்த தொந்தரவாக இருந்தாலும் நில மூலகத்தின் குறைப்பாடு தான். ஈரிலில் வலி இருந்தாலும் பெரும்பாலானோர் அதை பல் வலி என தவறாக கூறுவார்கள். ஈறு நோயுற்றால் பற்கள் பலவீனமாகி ஆட ஆரம்பித்து விடும்.  பல் கூச்சமும் இதில் அடங்கும்.
4.     நிறம் :  உடம்பில் தோல் பகுதியில் நிறம் மாறி மஞ்சள் நிறத்தில் பட்டை பட்டையாக தென்பட்டால் நில மூலக கோளாறினால் தான் எனக் கண்டு கொள்ள வேண்டும். சிறுநீரும் மஞ்சளாக வெளிப்படும்.  கண்ணும் மஞ்சளாகத் தோன்றும்.  இது மஞ்சள் காமாலை வரப்போகிறது  என முன்னதாகவே தெரிவிக்கிறது.
5.     இரத்தம் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படுகின்ற நிணநீர் இரண்டிலும் குறைப்பாடுகள் ஏற்பட்டால் அதுவும் நில மூலகத்தோடு சம்பந்தப்பட்டு தான் இருக்கும்.  இரத்தத்தின் அளவும், தரம் குறைந்து அதன் வீரியம் குறைவதும், இரத்த சோகையின் அறிகுறி தென்படுவதும் நில மூலகம் சீர்கெட்டுள்ளதினால் தான்.  நிணநீர் தரத்திலும் அளவிலும் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  வெள்ளை அணுக்களின் உற்பத்தி கெடும்.
6.     நில மூலகக் குறைப்பாடு இருப்பவர்கள், சுறுசுறுப்பாக வேளை செய்ய மாட்டார்கள்.  எப்பொழுதும் சோம்பல் முறித்துக் கொண்டிருப்பார்கள்.  சிறிது நேரம் கூட ஒரு வேலையில் முழுமனதுடன் ஈடுபட்டு செயல்பட மாட்டார்கள்.  கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
7.     அடிக்கடி  கவலைப்படும் நிலைக்கு வந்து விடுவார்கள்.  எதை எடுத்தாலும், செய்தாலும் அதில் சந்தேகப்பட்டு கவலை அடைந்து விடுவார்கள்.  எந்த வேலையிலும் முழு மனதுடனும் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாக ஈடுபட மாட்டார்கள்.  வாழ்க்கையில் விரக்தி அடைபவர்களாக தென்படுவார்கள்.
8.       உமிழ் நீர் சுரப்பது ரொம்பவும் பாதிக்கப்பட்டு வேதனை அடைவார்கள். வாய் வறண்டு போகும்.  இதனால் இவர்கள் ஜீரணமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
9.     பெண்களுக்கு மாதாந்திர இரத்தப் போக்கு தொல்லையாக அமையும்.  நாள்பட்டு வரும்.  சரியாக கழிவுகள் வெளியேறாது.  அடி வயிற்றில் வலி உண்டாகும்.  போக்கின் அளவும் சரியாக இராது. கர்பப் பை போன்ற அடி வயிற்று உறுப்புகள் தளர்ந்து இடம் மாறி இருப்பதாகத் தெரியும்.  வலியும் இருக்கும்.  இவ்வித அறிகுறிகள் எது தென்பட்டாலும் நில மூலக சக்தி புள்ளியைத் தூண்டினால் போதும்.

                                                              












Comments

Popular Posts